திங்கள், 9 நவம்பர், 2009

பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்தது: ஐக்கிய அரபு அமீரக பிரதமர்துபாய்: பொருளாதார நெருக்கடியைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகளெல்லாம் தீர்ந்ததாக ஐக்கிய அரபு அமீரக துணை அதிபரும், பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேஹ் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறியுள்ளார்.

மென் அன்ட் ஃப்ராயேர்ஸ் மாநாட்டை துவக்கிவைத்து முதலீட்டாளர்களோடு உரையாடினார் ஷேஹ் முஹம்மது. துபாயின் பொருளாதார துறை வலுவாக உள்ளது. இது வலுவான அடித்தளத்தில் உயர்த்தப்பட்டது. சொத்துத்துளை நிர்மாணிப்பதில் வேகமான பாய்ச்சலை சந்தித்துக்கொண்டிருந்தது துபாய். ஆனால் இதனை மட்டும் அடிப்படையாகக்கொண்டே துபாயின் வெற்றி என்ற வாதம் முற்றிலும் தவறானது. சர்வதேச சந்தையில் துபாயின் மதிப்பு மீண்டும் உயரும். மோசமான நிலை மாறிவிட்டது. துபாய் சிறந்த இடத்தில் உள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி துபாயின் முன்னேற்றமான பயணத்தை ஒருபோதும் பாதிக்காது என்றார்.

மேலும் அவர் துபாயும் அபுதாபியும் வேறுபட்டு நிற்பதாக கூறும் அறிக்கைகளை கண்டித்தார். அபுதாபிதான் துபாய், துபாய்தான் அபுதாபி. இரண்டையும் ஆள்வது ஒரே குடும்பம்தான். நஹ்யான் குடும்பமும், மக்தூம் குடும்பமும் பனியாஸ் என்ற குடும்பத்தில்தான் வந்தது. அரபு நாட்டிற்காக எங்களுடைய முன்னோர்கள் போராடினர். நாட்டையும், மக்களையும், ஆட்சியாளரையும், அரசையும் நினைத்து நாங்கள் பெருமைக்கொள்கிறோம். இதனை அறியாதவர் இது பற்றி அறியவேண்டியுள்ளது.ஏழு எமிரேட்டுகளும் சேர்ந்த நாடுதான் இது.பரஸ்பர நம்பிக்கையும், பலத்தையும் கொண்டுதான் இந்த நாடு வலுவடைந்துள்ளது. இவ்வாறு ஷேஹ் முஹம்மது கூறினார்


ததஜ வின் அழிச்சாட்டியங்களை 'அடக்கம்' செய்வோம் - தொண்டி த.மு.மு.க

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)

கடந்த சில தினங்களுக்கு முன்பு. ததஜ தலைவர் பீஜைனுல் ஆபிதீன், 'ஆன்லைன் பொய்யன் ஜமாத்' என்ற தனது அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் அப்துர் ரஹ்மானின் அறியாமை என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் எழுதியுள்ளார். குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான பீஜேயின் வழிகேட்டை எதிர்த்து அவரிடமிருந்து விலகிய அவருடைய மாணவர் அப்துர்ரஹ்மான் மன்பஈயை தனக்கே உரிய அபூஜஹ்ல் தனத்தோடு தாக்கி எழுதியிருக்கிறார்.அதோடு தொண்டி த.மு.மு.கவையும் தவறான முறையில் விமர்சித்துள்ளார். அதற்கு தகுந்த விளக்கமளிக்கவே இதனை எழுதுகிறேன்.

'உள்ளுர் த.மு.மு.கவினர் தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டுமின்றி தவ்ஹீதுக்கும் எதிராகச் செயல்படுவது தெரிந்திருந்தும், கட்டப்பஞ்சாயத்துக்கு உள்ளுரில் பேர் பெற்ற த.மு.மு.கவில் சேர்ந்து கொண்டார். த.மு.மு.க கூட்டங்களில் நம்மைத் திட்டும் தலைப்பு இவருக்கு' இவ்வாறு கிறுக்கியுள்ளார்

பீஜே.இவருடைய மோசடி வார்த்தைப் பிரயோகத்தைக் கவனியுங்கள். 'தவ்ஹீது ஜமாஅத்துக்கு' எதிராக செயல்படுவதாக கூறுவது ஒரு பொய் என்பது ஒருபுறமிருக்க, தவ்ஹீது கொள்கை கொண்ட ஜமாத் இவர்கள் மட்டும்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது இன்னொரு பொய்.நாங்களும் தவ்ஹீது வாதிகள்தான் இவர் முன்பு பிரிந்து வந்த ஜாக் இயக்கமும் தவ்ஹீத் கொள்கை கொண்ட ஜமாஅத்துதான். மட்டுமின்றி, பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் விபச்சாரக் குற்றச்சாட்டை கூறிக் கொண்டதால் இப்போது பிரிந்துள்ள இவரது உயிருக்குயிரான நண்பர்களின் இயக்கமும் தவ்ஹீது ஜமாஅத்துதான்.

நாங்கள் தவ்ஹீது கூட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல, தருதலைக் கூட்டத்திற்கு எதிரானவர்கள்.தவ்ஹுதுக்கு எதிரானவர்கள் என்றும் எங்களைபற்றி கிறுக்கி வைத்துள்ளார். நாங்களே தவ்ஹீதுவாதிகளாக இருக்கும் போது எப்படி தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுவோம். த.மு.மு.க சமூகப் பணிக்காக மட்டுமே துவக்கப்பட்ட இயக்கம். என்றாலும் தவ்ஹீதை நிலை நாட்டவும் மார்க்க அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் எங்களால் ஆன உழைப்பை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பீஜேயும் சேர்ந்து உருவாக்கிய த.மு.மு.கவின் அமைப்பு நிர்ணயச்சட்டபடி எந்த முஸ்லிமும் இதில் உறுப்பினராக இருக்கலாம் அதன்படி மாற்றுகருத்துக்களை கொண்ட முஸ்லிம்கள் சிலர் இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருக்கத்தான் செய்வார்கள்.சமுதாய நன்மைக்காக பல கருத்துள்ள முஸ்லிம்களும் ஒன்று பட்டு ஒரு இயக்கத்தில் இருப்பது தவ்ஹீதுக்கு எதிரானது அல்ல ஆனால் தொண்டி வடக்குத் தெரு மேலபள்ளிவாசலில் டி என் டி ஜே காரர் நிர்வாகியாக இருப்பது உங்கள் கொள்கைக்கும் இயக்கப் பாலிசிக்கும் எதிரானதாகும். ஷிர்க் செய்யக்கூடிய இமாமை வைத்து ஷிர்க் பாடல்பாடக்கூடிய, அதனை ஆதரிக்கக் கூடிய தலைமை நிர்வாகளைக் கொண்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு நிர்வாக உறுப்பினராக இருப்பதென்றால் கொள்கை என்னவாயிற்று வெட்கங் கெட்டவர்களே?

தொண்டி மேலப்பள்ளிவாசல் உங்களைப் பொறுத்தவரை ஒரு கட்டிடத்தை போல்தான் அதனால்தானே எந்த அவசியமும் இல்லாமல் அதன் எதிர்திசையில் அருகிலேயே உங்கள் ஜமாத் சார்பில் பள்ளிவாசல் கட்டுகிறீர்கள்! உங்கள் ஜமாத்துக்காரர்களை மேலப்பள்ளிவாசலில் தொழக் கூடாது எனத் தடுக்கிறீர்கள்!

பள்ளிவாசலில் ஷிர்க் நடக்கிறது. இமாம் ( உங்கள் பார்வையில் ) ஒரு முஷ்ரிக், ஜமாஅத் நிர்வாகிகளெல்லாம் முஷ்ரிக்குகள், அதில் டி என் டி ஜே காரன் ஒரு நிர்வாக உறுப்பினராக இருப்பதென்றால் உங்கள் கொள்கை என்னவானது வேடதாரி பீஜைனுலாபிதீனே!இப்படி செய்யும் நீங்கள், அனைத்து முஸ்லிமும் பங்குபெறும் இயக்கம் என தெளிவாக அறிவித்து அறப்பணி செய்யும் த.மு.மு.கவை தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுதாக கூறுவதற்கு வெட்கப்பட வேண்டும்.கட்டப்பஞ்சாயத்துக்கு உள்ளுரில் பேர் பெற்ற த.மு.மு.க என்றும் எழுதி தான் ஒரு அவதூறு பேர்வழி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் பீஜே.

இந்தப் பீஜே த.மு.மு.கவில் இருக்கும் போது செய்த நற்பணிகளை விட அதிகமாகவும் சிறப்பாகவும் தனது பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது தொண்டி த.மு.மு.க! எல்லாப் பகுதி த.மு.மு.கவைப் போல!

மைக்கைப் பிடித்தால் ஏக வசனத்திலும் கீழ்த்தரமாகவும் ரவுடித்தனமாகவும் பேசும் உங்கள் ஜமாத் பொறுப்பாளர்கள் போன்றவர்களால் ஏற்படும் சண்டை சச்சரவுகளை நியாமான வழியில் தீர்த்து வைப்பது போன்ற சமூகச் சேவையில் தான் த.மு.மு.க ஈடுபடுமே தவிர கட்டப்பஞ்சாயத்தோ நெட்டப்பஞ்சாயத்தோ செய்வது கிடையாது.

பீஜே த.மு.மு.கவில் இருக்கும் போது யாரை விரும்பி தலைமையிலேயே வைத்திருந்தாரோ அந்த நன்னடத்தையும் தொண்டுள்ளமும் கொண்ட சகோதரர்தான் இப்போதும் தொண்டியில் எங்களை வழிநடத்துகிறார். அவரிடம் நற்பணிகளில் முன்னேற்றம் என்ற மாற்றத்தைத் தவிர வேறு மாற்றத்தை நாங்கள் காணவில்லை.ஆனால் அலிச்சாட்டியங்களில் முன்னேறியுள்ள உங்களிடம் நிறைய மாற்றங்களை எல்லா மக்களும் கண்டு கொண்டிருக்கிறார்கள் பொய்யன் ஜமாத்தின் தலைமை குரு பீஜே அவர்களே!

த.மு.மு.க கூட்டங்களில் பீஜேயை திட்டுகிற தலைப்பு அப்துர்ரஹ்மானுக்கு கொடுக்கப்படுவதாகவும் கிறுக்கியிருக்கிறார் பீஜே.த.மு.மு.கவின் எந்தக் கூட்டத்திலும் இவரைத் திட்டுகிற தலைப்பு யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை.

கடந்த (2006) சட்டமன்றத் தேர்தலில் உங்களின் தவறான நிலைப்பாட்டை சரியான வழிமுறையில் விமர்சித்துப் பேசியது மட்டும் தான் அப்துர்ரஹ்மான் த.மு.மு.க மேடையில் உங்களைப் பற்றி பேசியது.ஆனால் அதற்கு சில தினங்களுக்கு முன் நடந்த உங்கள் ஜமாத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உங்களுக்கே உரிய இழிந்த வழிமுறையில் த.மு.மு.க தலைமை நிர்வாகிகளை திட்டிப் பேசினீர்கள். உங்களிலன் மட்டரக நடத்தையை அடுத்தவர் மீது போடுவதேன்!

'கடந்த தேர்தலில் சாமியாரிடம் ஜவாஹிருல்லா ஆசி வாங்கிய பிறகும் .......' என்று பேப்பர்காரர்கள் வாந்தி எடுத்ததை திண்று மீண்டும் வாந்தி எடுத்துள்ளார் புரட்டல் மன்னன் பீஜே இந்த செய்திக்கு அப்போதே டிவியில் விளக்கமளித்து விட்டார்கள் ஜவாஹிருல்லா. தேர்தலில் ஆதரவு கேட்டுச் சென்றதை பேப்பர்காரர்கள் தங்கள் சிந்தனைப்படி அப்படி எழுதிவிட்டார்கள் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதை பார்க்காத மக்களிடம் தவறான செய்தியை கொண்டு செல்வதற்காக இதை எழுதியிருக்கிறார்.

கும்பிடு போட்ட தவ்ஹீது தலைவன் (?)தவ்ஹீது கொள்கைவாதிகளின் தலைவனாக தன்னை பற்றி கற்பனை செய்து கொண்டு அலையும் பீஜே ஆட்சியாளரையும், அதிகாரியையும் சந்திக்கச் சென்ற போது கும்பிடுபோட்டவர்தான் என்ற செய்தியையும் அப்போது டிவியில் விளக்கமாக சொல்லப்பட்டது.இவர்தான் அடுத்தவர் கொள்கை உறுதிபற்றியும் மார்க்கப் பற்று பற்றியும் அதிகப் பிரசங்கித்தனம் செய்து கொண்டு திரிகிறார்!

பொய்யன் ஜமாத் தலைவர் பீஜைனுலாபிதீன் அவர்களே உங்கள் நாவுக்கு அடக்கம் தேவைப்படுவதுபோல் உங்கள் எழுத்துக்களுக்கும் அடக்கம் தேவைப்படுகிறது. இதை புரிந்து செயல்படுங்கள்!இல்லாவிட்டால் உங்கள் அழிச்சாட்டியங்களை அல்லாஹ்வின் உதவியோடு 'அடக்கம்' செய்யும் தொண்டி த.மு.மு.க!

எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன், அவனே சிறந்த பொறுப்பாளன்.

இவண் அஹ்மத் பாயிஸ் , தொண்டி.

சனி, 7 நவம்பர், 2009

துபை முமுகவின் 4 வது இரத்ததான முகாம்

அல்லாஹ்வின் பெரும் உதவியால் 06-11-09 வெள்ளிகிழமை காலை 9.30 மணியளவில் துபை முமுக சார்பாக 4 வது இரத்த தானம் முகாம் துபை அல் வாசல் மருத்துவமனையில் நடைபெற்றது.
துபை மண்டல நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு மண்டல மருத்துவரணி செயலாளர் திருப்ந்துருத்தி அப்துல் ரவூஃப் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இம்முகாமில் 50 சகோதரர்கள் இரத்த தானம் செய்தார்கள். முகாமினுடைய சிறப்பு அழைப்பாளர்களாக ST கூரியர் நிறுவனத்தின் துபை மேலாளர் சகோதரர்க சிராஜ் அவர்களும், இஸ்லாமிய அழைப்பாளர் கீழை ஜமீல் அவர்களும் அமீரகத்தினுடைய தொழில் அதிபரும் இளையாங்குடியைச் சார்ந்த சகோதரர் அபூதாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்கள். அமீரகத்தின் முமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி முகாமை பார்வையிட்டு சென்றார்கள். சிறப்பான முறையிலே துபை மண்டல முன்னால் துணைச் செயலாளர் ஹைதர் நஸீர் அல் கூஸ் பொருப்பாளர் மேலப்பாளையம் அப்துல் கரீம் ஆகியோர் சிறப்பான வாகன வசதிகளை செய்திருந்தார்கள்.
--நமது செய்தியாளர்--

திங்கள், 2 நவம்பர், 2009

இஸ்லாத்தின்-பால் அமெரிக்கப் பெண்கள்

பெற்றோர்களின் மத நம்பிக்கை அவர்களின் ஆன்மீக எதிர்பார்ப்பை நிறைவேற்றாதாலும் வரும் கேள்வி அறிவுக்கு புராதன நம்பிக்கைகள் ஈடு கொடுக்க முடியாததாலும் அமெரிக்காவில் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகிறது,சமீபத்தில் அமெரிக்கா இஸ்லாமியக் கவுன்சில் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது. தேசிய அளவில் அமெரிக்காவில் உள்ள கிரேட்டர்போஸ்டன் முஸ்லிம் சமூகத்தில் பெண்களே மூன்றில் இரு பங்காக இருக்கிறனர்.இஸ்லாத்தின் பக்கம் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதால் புதிர் இருப்பதாக அப் பெண்களின் குடும்பத்தார் கருதுகின்றனர். எந்த ஒரு சமயம் பெண்களை அடிமைபடுத்தி அடக்கி ஆள்கிறது என்று உருவகப்படுத்திக் காட்டப்படுகிறதோ அந்த மதத்தை நோக்கிப் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது, ஆனால் புதிதாக இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம் பெண்கள் ஒரு சேர அக்குற்றச் சாட்டை மறுக்கின்றனர்.

பிரச்சார நோக்கத்துடன் இஸ்லாத்தின் மீது பொய்யான தோற்றத்தை உருவகப்படுத்திக் காட்டப் படுகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக சொத்துரிமை வாரிசுரிமை ஆகிய உரிமைகளை மேலை நாட்டு கலாச்சாரம் பெண்களுக்குக் கொடுப்பதற்;கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.இஸ்லாத்தை தழுவும் வெள்ளை கிறிஸ்துவப் பெண்கள் வாழ்க்கையில் இஸ்லாம் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இப்புதிய முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் என்னும் தலைதுண்டினால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அணியும் ஆடையிலும் வித்தியாசம் தெரிகிறது, கவர்ச்சி ஆடையை அவர்கள் வெறுக்கிறார்கள.நீண்ட தொளதொளப்பான ஆடையை அணிகின்றனர். அது அவர்களின் ஒழுக்க மாண்பை கூட்டிக்காட்டுகிறது.

அவர்களின் உணவுப்பழக்கமும், இஸ்லாமிய விதிமுறைக்கு மாறுகிறது. பன்றி மாமிசத்தை அவர்கள் தொடுவதில்லை. புகைப்பது இல்லை. குடிப்பழக்கத்துக்கு அவர்கள் முழுக்குப் போடுகிறார்கள். அவர்களின் ஆன்மீகப்பாதை ஐங்காலத் தொழுகை இடம் பிடித்துக் கொள்கிறது. இஸ்லாத்தை ஏற்றதும் அவர்கள் புதுப்பொழிவுடன் புதிய மனிதர்களாக உள்ளும் புறமும் மாற்றமடைகின்றனர். அவ்வாறு மாற்றமடைந்த பெண்கள் சிலரின் தகவல்களைத் திரட்டி கிழே தருகிறோம்:கிரேஜினோ கிரேட்டர், போஸ்டனில் உள்ள ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர், அவரின் தந்தை நம்பிக்கை இழந்து விட்ட கத்தோலிக்கர், தாயோ விறுவிறுப்பான பெந்த கொஸ்ட். கிறிஸ்துவ சமயப் பற்றுக் கிடையே கிரேஜினோ அலைகழிக்கப்பட்டார். சந்தோஷமும் குழப்பமும் அவர் மனதில் குடிகொண்டிருந்தது அப்பொது அவருக்கு வயது 14. வெல்ஸலி ஜூனியர் கல்லூரியின் மாணவி, குழப்பத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு உலக மதங்களை ஆராய முற்பட்டார். புத்தம், ஹிந்து, யூதம், மற்றும் இஸ்லாம் ஆகியவைகளை ஆழ்ந்து படித்தார். முடிவில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.

இஸ்லாம்தான் தனது தாயின் கிறிஸ்துவத்தை விடவும் உண்மையை ஒங்கி ஒலிக்கிறது என்று நம்புகிறார். கடந்த மார்ச் 8-ம் தேதி போஸ்டனில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்வைத்தவிர வணக்கத்துக்குரிய கடவுள் யாருமில்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்,, என்று ஷஹாதத் (இஸ்லாமிய உறுதி மொழி) சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.கிறிஸ்துவச் சமயம் வாரம் ஒரு முறை சர்ச்சுக்குப் போவதும் ஒரு நல்ல மனிதராக இருப்பதும் மட்டுமே. ஆனால் இஸ்லாம் ஒரு முழு வாழ்க்கை நெறி என்று அவர் கூறிகிறார். மகளின் மனமாற்றம் அவரது தந்தைக்கு அடங்காக் கோபத்தை ஏற்படுத்தியது, உனக்கு ஒரு நல்ல வேலையோ அல்லது நல்ல கணவனோ கிடைக்காது, என்று அவர் வருந்துகிறார். அவரது தாய் அழுது தவித்து ஏசுவை துணைக்கு அழைக்கிறார். வசந்த கால விடுமுறையில் வீட்டிற்குப் போன கிரேஜினோவிற்கு நல்ல வரவேற்பு இல்லை. அவரது தந்தை, ஹிஜாப் அணிந்த அவரை பார்க்க சகிக்காமல் தனது மற்ற குழந்தைகளையும் அவரோடு பழக விடாமல் தடுக்கிறார்.

ஆனால் இஸ்லாம் குடும்ப உறவு முறையை பேணிக் கொள்ள அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் கிரேஜினோ தமது உறவுகளைக் குடும்பத்துடன் புதுப்பித்துக்கொள்ள இன்னும் முயற்சி செய்து வருகிறார், ஆனால் அது கடினமானதாக அவருக்கு தெரிகிறது. ஏனெனில் அவரது தந்தை கல்லூரிக்கு கட்டவேண்டிய கட்டணத்தை கட்டுவதை நிறுத்தி விட்டார்.இருப்பினும் கிரேஜினோ ஹிஜாப் அணிவது தம்மை பல சங்கடங்களிலிருந்து விடுவிக்கிறதென்று கூறுகிறார். சுருள்சுருளான இடுப்பு வரை நீண்ட அழகிய தலைமுடி அவருக்குண்டு. ஹிஜாப் அணியாத காலங்களில் துடுக்குதனம் கொண்டோரை சந்திக்க நேரும் போது அவர்களில் சிலர் நெருங்கி வந்து, இந்த அழகிய கூந்தலை நான் தொடலாமா? என்று தன்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்று கூறுகிறார். இப்பொது ஹிஜாப் அணிவது தம்மை இப்படிப் பட்ட இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று சொல்கிறார். இப்போது தன்னை யாரும் உற்று நோக்குவதில்லை. உடல் அழகையோ, உருவ அமைப்பையோ, கூந்தல் அலாங்காரத்தையோ யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. குறும்புத்தனம் செய்பவர் கண்ணுக்கு நாம் தெரிவதில்லை என்று கிரேஜியானோ கூறுகிறார்.மற்றுமொரு பெண்மணி கிறிஸ்டினா சபியா டோபியாஸ்நாகி. அவர் சாமர்வில்லாவைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ஒரு கத்தோலிக்கர். தாய் ஒரு யூதர். ஆனால் அவர் யூத மதக்கோட்பாடுளை கடைபிடிப்பதில்லை. சபியாவுக்கு வயது முப்பது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் இஸ்லாத்தை தழுவினார்.மேலைநாடுகளில் கடைபிடிக்கப்படும் இஸ்லாம் இலட்சியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது, இங்கு நாம் எப்படி இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறோம் என்பதை பல நாடுகள் அக்கறையுடன் கவனித்து வருகிறன்றன. அந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் சரியான உதாரணமாக அமையலாம். ஏனெனில் உலகில் வேறு நிலப்பரப்புகளை விடவும் அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான சமத்துவ ஒருமைப்பாடு கொண்ட இஸ்லாமியக் கலாச்சாரம் அவர்களுக்கு சிறந்த முன் மாதிரியாகத் திகழும் திறம் படைத்தது.

அது உலக அளவில் முஸ்லிம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்று சபியா கூறுகிறார்.மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல் வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி, கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன். நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவ்வாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது.

நன்றி:தமிழ்முஸ்லிம்.காம்

சனி, 31 அக்டோபர், 2009

கல்பாக்கம் அணுமின் நிலையம் எதிரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது
கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அது சார்ந்த துறைகளில் சிறுபான்மையினருக்கும், 16 கி.மீ சுற்று வட்டார மண்ணின் மைந்தர்களுக்கும் உரிய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் இடஒதுக்கீடு கேட்டு மனிதயே மக்கள் கட்சியின் சார்பில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அணுமின் நிலைய வளாகத்தின் முக்கிய வாயில்கள் மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போராட்டத்திற்கும் காவல்துறை தடை விதித்தது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடையை மீறி அங்கு கூடினர்.தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், ம.ம.க பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, மதிமுக தலைமைக் கழக பிரதிநிதி வந்திய வேந்தன், டாக்டர். புகழேந்தி, புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளர் சங்கர் உட்பட பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனங்களில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

பொள்ளாச்சியில் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


பொள்ளாச்சியில் கடந்த அக்டோபர் 23 அன்று தமுமுகவின் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. தமுமுக மற்றும் ம.ம.க மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.