திங்கள், 9 நவம்பர், 2009

பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்தது: ஐக்கிய அரபு அமீரக பிரதமர்துபாய்: பொருளாதார நெருக்கடியைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகளெல்லாம் தீர்ந்ததாக ஐக்கிய அரபு அமீரக துணை அதிபரும், பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேஹ் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறியுள்ளார்.

மென் அன்ட் ஃப்ராயேர்ஸ் மாநாட்டை துவக்கிவைத்து முதலீட்டாளர்களோடு உரையாடினார் ஷேஹ் முஹம்மது. துபாயின் பொருளாதார துறை வலுவாக உள்ளது. இது வலுவான அடித்தளத்தில் உயர்த்தப்பட்டது. சொத்துத்துளை நிர்மாணிப்பதில் வேகமான பாய்ச்சலை சந்தித்துக்கொண்டிருந்தது துபாய். ஆனால் இதனை மட்டும் அடிப்படையாகக்கொண்டே துபாயின் வெற்றி என்ற வாதம் முற்றிலும் தவறானது. சர்வதேச சந்தையில் துபாயின் மதிப்பு மீண்டும் உயரும். மோசமான நிலை மாறிவிட்டது. துபாய் சிறந்த இடத்தில் உள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி துபாயின் முன்னேற்றமான பயணத்தை ஒருபோதும் பாதிக்காது என்றார்.

மேலும் அவர் துபாயும் அபுதாபியும் வேறுபட்டு நிற்பதாக கூறும் அறிக்கைகளை கண்டித்தார். அபுதாபிதான் துபாய், துபாய்தான் அபுதாபி. இரண்டையும் ஆள்வது ஒரே குடும்பம்தான். நஹ்யான் குடும்பமும், மக்தூம் குடும்பமும் பனியாஸ் என்ற குடும்பத்தில்தான் வந்தது. அரபு நாட்டிற்காக எங்களுடைய முன்னோர்கள் போராடினர். நாட்டையும், மக்களையும், ஆட்சியாளரையும், அரசையும் நினைத்து நாங்கள் பெருமைக்கொள்கிறோம். இதனை அறியாதவர் இது பற்றி அறியவேண்டியுள்ளது.ஏழு எமிரேட்டுகளும் சேர்ந்த நாடுதான் இது.பரஸ்பர நம்பிக்கையும், பலத்தையும் கொண்டுதான் இந்த நாடு வலுவடைந்துள்ளது. இவ்வாறு ஷேஹ் முஹம்மது கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக